கோயிலில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது. உள்ளங்கைகளில் பத்திரமாய் வாங்கின நண்பனிடம் உடன் வந்தவன் சொன்னான், “நீ எச்சரிக்கையாய் வாங்கி கண்களில் ஒற்றி, இதழ்களில் ஊற்றி, மிச்சத்தைத் தலையிலும் தெளிப்பாய். கொஞ்சம் அலட்சியமாய் இருந்தால்கூட சிந்திவிடும். பத்திரமாய் பாதுகாப்பதாக நினைத்து கைகளில் இறுக்க மூடினாலோ விரல்கள் வழியாக

வழிந்துவிடும். இந்தத் தீர்த்தம் போலவே உறவுகளும் மிகப் புனிதமானவை. அலட்சியம் காட்டினாலும் அதிகமாகப் பிடித்து வைக்க முயன்றாலும் அவற்றை இழந்துவிடுவாய்”. உறவுகளின் பெருமையை உணர்ந்தான் நண்பன்!