அந்தக் கடை முதலாளி புதிய தொழில்களில் ஈடுபட்டதால் கடையில் அதிக கவனம் செலுத்தவில்லை. உடனே பணியாளர்கள் பலருக்கும் கவனம் சிதறியது. சரியாக வேலை பார்க்காதவர்களை முதலாளி வேலையைவிட்டு நிறுத்தினார். உடனே, “விரைவில் கடையை மூடிவிடுவார்” என்ற வதந்தி பரவியது. எளிய வேலையில் இருந்த ஒருபெண் மட்டும்

கடமைகளைச் செய்து, மற்ற வேலைகளை தானாக மேற்கொண்டு, முதலாளிக்கு நினைவூட்ட வேண்டியதை நினைவூட்டினாள். அந்தப் பெண்ணுக்குப் பொது மேலாளர் பதவி கிடைத்தது. தள்ளிப் போகிறவர்கள் தவற விடுகிறார்கள். முன் வந்து செய்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.