நேர்காணல்

8 லட்சம் கி.மீ பயணம் செய்தவர்…

கணக்கிலடங்காத பாதைகளை வெளிக்கொணர்ந்தவர்…

இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளும் இவருக்கு உள்ளங்கை ரேகை.

லிவிங் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஹெச்.வி.குமார்…

நேர்காணல்களில் வழக்கமாக கேட்கப்படும் எந்த கேள்விகளையும் இவரிடம் கேட்கவே முடிவதில்லை. வாழ்க்கை குறித்தும் இவர் புரிந்திருக்கும் சாதனை குறித்தும் இவருக்கு இருக்கும் பார்வை வித்தியாசமானது. இந்தியாவின் எந்த மூலையில் நின்று இவரை தொடர்பு கொண்டாலும் அங்கிருந்து நாம் செல்வதற்கான சிறந்த வழியை நொடிப் பொழுதில் சொல்லி விடுகிறார். நேர்காணல் துவங்கிய சில மணி நேரத்திற்கெல்லாம் மூன்று தொலைபேசி அழைப்புகள். தொடர்பு கொள்பவர்களுக்கு எல்லாம் வழிகாட்டி விட்டு இடையிடையே நம் கேள்விகளுக்கும் பதிலளித்தார்… ஹெச்.வி.குமார்.

உங்கள் பின்புலம்…

பிறந்து வளர்ந்தது கேரளாவில். அடிப்படையில் என் தொழில் சார்ட்டட் அக்கவுண்டன்ட். அந்த காலத்தில் எல்லாம் பயணம், விடுமுறை, சுற்றுலா போன்ற கலாச்சாரம் எல்லாம் இருந்தது இல்லை. எனக்கு பிடித்தது எல்லாம் காலாற நெடும்தூரம் நடப்பது, மிதி வண்டி வாங்கிய பின் நான் பயணம் செய்த தூரம் இன்னும் அதிகமானது. படிப்பு முடிந்ததும் அசோக் லேலண்டில் வேலை. பின்பு பிரீமியர் மில் நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது மோட்டார் பைக் ஒன்று வாங்கினேன். அன்று முதல் எங்கு செல்வதாய் இருந்தாலும் வண்டிதான். என் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஈரோடு, சேலம் என அனைத்து இடங்களுக்கும் வண்டியிலேயே சென்று விடுவேன். கொடைக்கானல், திருப்பதி, பெங்களூர், ஊட்டி என இன்னும் பல சுற்றுலாத்தலங்களையும் முதன் முதலாக என் வண்டியில் சென்றுதான் கண்டு களித்தேன். நான் இப்படிச் செல்வதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்படுவது உண்டு. ”என்னடா இந்த ஆளு எங்க போறதுன்னாலும் வண்டியிலேயே போயிடுறாரே” என்று. ”எங்கயாவது போகணுமா… எந்த ரோடுன்னு தெரியலையா… குமாரைக் கேளு” என்று என் நண்பர் வட்டம் சொல்லத் துவங்கியது. பின்னாளில் எனக்கு அது ஒரு தனி அடையாளமாகவே மாறிப்போனது. பொழுது போக்காக துவங்கிய பயணம், இன்று என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

அவரவர் வாகனங்களில் பயணிக்க விரும்புவது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் ஆசை தான். இதிலிருந்து நீங்கள் எந்த இடத்தில் வித்தியாசப்படுகிறீர்கள்…?

எனக்கு என்னை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. ஆனால் கடந்த 26 ஆண்டுகளாக நான் சென்று வந்த ஒவ்வொரு பயணமும் டாக்குமெண்ட் செய்யப்பட்டுள்ளது. எங்கு போனேன், எப்படி போனேன், எங்கு பெட்ரோல் போட்டேன், எந்த ஹோட்டலில் சாப்பிட்டேன், எத்தனை செக் போஸ்ட் என அனைத்தும் ஒரு என்சைக்ளோ பீடியா போல குறித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள்தான் இன்று யார் எங்கிருந்து என்னை அழைத்தாலும் அவர்களுக்கு உதவ எனக்கு உதவியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இடத்திற்கும் ஆன மேப், அந்த இடத்தில் தற்போது என்ன நிலவரம் (மழையா, பாதையில் ஏதேனும் வேலை நடக்கிறதா?) என்பது போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து குறித்து வைக்கிறேன்.

அடிப்படையில் நான் ஒரு அக்கவுண்ட

ன்ட் என்பதனால் என்னால் சுலபமாக குறிப்புகளை முறைப்படுத்த முடிகிறது. தென்னிந்தியச் சாலைகள் குறித்து மிகுந்த பரிச்சயம் இருப்பதால் என்னை அதன் அதாரிட்டியாகவே பார்க்கிறார்கள். எந்த நேரத்தில் எங்கிருந்து என்னை அழைத்தாலும் அவர்களின் சந்தேகங்களுக்கு என்னால் தூக்கத்தில் கூட சரியான பாதையை சொல்லமுடியும்.

இப்படி எல்லா இடங்களுக்கும் சாலைவழிப் பயணம் மேற்கொள்வதால் உடல் சோர்வும், உங்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் படுவதில்லையா?

இதிலென்ன உடல்சோர்வு இருக்கிறது. என்னால் 55 மணி நேரம் வரை தொடர்ந்து வண்டி ஓட்டிச் செல்லமுடியும். நாடெங்கும் என் மோட்டார் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்த வேளையில், சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களிடம் சென்று, ”நான் வண்டி ஓட்ட வேண்டும். விடுப்பு வேண்டும்” என்று கேட்டால் அவர்கள் நிச்சயம் கொடுக்கப்போவதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய அளவு நேரம் இருக்கிறது என்பது என் கருத்து. எனக்கு எத்தனை வேலை கொடுத்தாலும் செய்ய முடியும். ஒரு விஷயத்தின்மீது ஈர்ப்பும் உண்மையான அர்ப்பணிப்பும் இருந்தால் நிச்சயம் நம்மால் நேரத்தை அமைத்துக் கொள்ளமுடியும். என் வேலை முடிந்ததும் ஐந்துமணிக்கெல்லாம் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். வார விடுமுறை நாட்களில் என் பயணத்தைத் திட்டமிடுவேன். என் தொழிலையும் சரியாகச் செய்கிறேன். என் பயணத்தையும் சரியாக திட்டமிடுவேன். அதனால்தான் என் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதில்லை. எனக்கு திருமணமான பின்பு என் மனைவியும் என்னை புரிந்து கொண்டார்.

ஒரு முறை நான் நெடுஞ்சாலை ஒன்றில் என் பைக்கில் பயணம் செய்தபோது, தடுமாறி விழுந்ததில் என் கை உடைந்து விட்டது. என்னைப் பார்க்க என் நண்பர் கோவையிலிருந்து மனைவியுடன் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்து விட்டு திரும்புகையில், ”நீ பைக்கிலேயே போ…” என்று கூறினேன்.

ஒரு பைக் விபத்தில் என் கை உடைந்து தான் படுத்திருந்தேன் என்பதையும் மறந்து, நான் கூறியதைக் கேட்டு என் மனைவிக்கும் அந்த நண்பருக்கும் ஆச்சரியமாக போனது. இதில் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் என் வார்த்தையைக் கேட்டு என் நண்பன் பைக்கிலேயே சென்றான் என்பதுதான்.

அலுவலகம் முடிந்ததும் பயணத்தை தொடர்கிறீர்கள். வார விடுமுறை நாட்களிலும் பயணம் செய்கிறீர்கள். நீங்கள் சாதிக்க உங்கள் குடும்பம் உங்கள் இருப்பை வெகுவாக இழக்கிறது இல்லையா?

முதலில் இது சாதனை என்றோ இலக்கு என்றோ சொல்ல முடியாது. நாம் சாப்பிடுவதை, பல் துலக்குவதை எல்லாம் சாதனை என்று சொல்ல முடியுமா? இவை அனைத்தும் வாழ்வின் தேவை, அங்கம். அது போலத்தான் நமக்கு எதன் மீது விருப்பமோ அந்த செயலும் இருக்க வேண்டும். நாம் செய்ய முயற்சிக்காததை பிறர் செய்து விட்டால் அசாத்தியம் என்று பார்க்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை அனைத்துமே சாத்தியம்தான். என்னுடைய இந்த செயல்களைக் கண்டு என் மனைவி சில சமயம் சலித்துக் கொள்வதும் உண்டு. இப்படியெல்லாம் செய்வதனால் என்ன பயன் என்பது போன்ற புகார்களை என்மீது அவள் சுமத்துவது உண்டு.

இதில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது புகார்களை அல்ல. புகார்களின் அளவைத்தான் (கங்ஸ்ங்ப் ர்ச் இர்ம்ல்ப்ஹண்ய்ற்ள்). புகார்களை விடவும் எங்களுக்குள் புரிதலின் (மய்க்ங்ழ்ள்ற்ஹய்க்ண்ய்ஞ்) அளவு அதிகமாகவே இருப்பதாகவே உணர்கிறேன். நான் செய்வது வித்தியாசமாக இருப்பதனால் நான் சம்பாதிப்பதில்லை என்றில்லை. நானும் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.

அடிப்படையில் ஒரு அக்கவுண்டன்டாக என் பணியைத் துவக்கினேன். இன்று கிரஸ்டார் (இழ்ங்ள்ற்ஹழ்) என்ற என் சொந்த நிறுவனத்தை துவக்கி உள்ளேன். பல வெளிநாட்டின் முன்னணி வங்கிகளில் கன்சல்டன்டாக இருக்கிறேன். என் குடும்பம் என் இருப்பை நிச்சயம் இழக்காது. காரணம் தந்தையாக, கணவனாக நான் ஆற்ற வேண்டிய கடமைகளை சரியாகச் செய்கிறேன். என் குழந்தைக்கு எது தேவையோ அதைச் செய்து முடிக்கிறேன். நான் முன்பு சொன்னதுபோல் அனைத்தையும் செய்ய நம்மிடம் போதுமான நேரம் இருக்கிறது.

பின்பு வேலை நிமித்தமாக என் குடும்பத்தோடு மும்பைக்கு குடிபெயர்ந்தோம். அப்போதெல்லாம் என் விடுமுறை நாட்களில் நான் என் மோட்டார் பைக்கில் தனியாகவே டார்ஜிலிங், சிக்கிம், பூட்டான் வரை சென்றிருக்கிறேன். அங்கு செல்வதற்கான பாதைகளை நானே கண்டறிவேன். இந்த முயற்சியின்போது சரியான கழிப்பிடம் இருக்காது. லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும் ப்ளாட்பாரத்தில் உறங்க வேண்டியிருக்கும். அன்று போதிய தொலைதொடர்பு இருக்கவில்லை.

எங்கள் வீட்டில் தொலைபேசி எல்லாம் அப்போது இருக்கவில்லை. பக்கத்துவீட்டின் பிபி எண் இருக்கும். நான் சாலைகளை கடக்கும்போது ஏதாவது தொலைபேசி பூத்களைக் கண்டால் ஒரு முறை, தொலைபேசியில் நான் நலமாக இருக்கிறேன் என்று மட்டும் கூறி வைத்து விடுவேன்.

நம் இந்திய மனநிலையைப் பொறுத்தவரை ஒரு விடுமுறை என்றால் நேரம் தாழ்ந்து எழுவதும், குடும்பத்தோடு எங்காவது செல்வது, சென்ற பின்பு தங்குவதற்கும் உண்பதற்கும் சுற்றிப்பார்ப்பதற்கும் முன்னேற்பாடுகள் செய்வது என்றளவில்தான் இருக்கிறது. நான் இதுபோன்ற முன்னேற் பாடுகளுக்கு அடிமையாக விரும்பவில்லை. குறித்த நேரத்தில் அங்கு சென்று சேர வேண்டும். ஒப்புக் கொண்ட எதுவும் தடைபட்டுவிடக்கூடாது. இது போன்ற பல அழுத்தங்களை சுமக்க எனக்கு விருப்பமில்லை. மும்பையிலிருந்து 3000 கி.மீ. தாண்டி நான் பயணிக்கும்போது ஒரு பெட்ரோல் பங்கில் என் வண்டியை நிறுத்தினேன். அங்கு பணி புரிந்த வேலையாள் நான் தனியாக பல ஆயிரம் மைல்கள் தாண்டி வந்ததைப் பார்த்து அதிசயித்து எனக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினார். அவ் வழியில் இருந்த அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த அனைவரும் நான் மோட்டார் பைக்கில் வருவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இயற்கையான நிகழ்வையும் உண்மையான மகிழ்ச்சியையும் அனுபவிப்பதையே நிதர்சனமான மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஆந்திரப்பிரதேசம், பூட்டான், சிக்கிம், காஷ்மீர் போன்ற பகுதிகளாக தனியாக சென்றதாக கூறுகிறீர்கள். அப்போது உங்களுக்கு எந்த வெளிப்புற அச்சுறுத்தலும் இருக்கவில்லையா?

இந்த இடங்கள் மட்டுமல்ல. நான் பெரும் பாலான இடங்களுக்கு தனியாகத்தான் செல்கிறேன். நான் பயணத்தை துவக்கும்போது சிலர் என்னோடு வருவதாகக் கூறுவார்கள். ஆனால் பயணம் துவங்கும் வேளையில் என் பெற்றோர் அனுமதிக்கவில்லை, உடல்நிலை சரியில்லை என்று கூறிவிடுவார்கள். நான் யாருக்காகவும் காத்திருக்க விரும்புவதில்லை. சமயங்களில் என் மனைவி என்னுடன் வருவதாகக் கூறுவார். அவர் வேலை நிமித்தமாக என்னுடன் வரவில்லை என்றால்கூட நான் என் பயணத்தை துவக்கிவிடுவேன்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் பூட்டான், சிக்கிம் போன்ற இடங்களிலும் சில அச்சுறுத்தல்கள் உண்டு. எத்தனையோ முறை போலீஸிடம் மாட்டியிருக்கிறேன். தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது நான் காஷ்மீரில் பயணம் செய்துகொண்டிருந்தேன். இதுபோல் சிக்கலான சூழ்நிலைகளில் ஒன்றே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வேன். ”எப்பேர்ப்பட்ட திறமை சாலியாக இருந்தாலும் அது என் வீட்டுப்படியை தாண்டும் வரைதான்” வீட்டிற்கு வெளியே நான் ஒன்றும் இல்லாதவன். வீட்டில் இருக்கும் அதிகாரத்தை போலீஸிடம் என்னால் காட்ட முடியாது. அப்போது நிகழ்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும், என் ஈகோவை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகச் சாதாரண மானவனாய் இந்த உலகைக் காணும் பார்வையை வளர்த்துக்கொள்ளவும், இடத்திற்கு தகுந்தாற்போல் பேசவும், பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இது போன்ற அச்சுறுத்தல்கள் நிற்கும்வரை என்னால் பொறுமையோடு காத்திருக்க முடியாது. அனைத்தையும் தாண்டி என் பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

உங்கள் பயணக்குறிப்புகளை தொகுத்துள்ள தாகக் கூறினீர்கள். மேலும் நீங்கள் செய்துவரும் செயல்கள் என்னென்ன?

நான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த நெடுஞ்சாலையிலிருந்து நான் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படி செல்வது? என்னுடன் வயதான பெரியவர் இருக்கிறார். இந்த சாலையிலிருந்து மருத்துவமனை எவ்வளவு கி.மீ? என்னுடன் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்க பாதுகாப்பான இடம் எது? எனப் பல குறும் செய்திகளும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தினமும் 20 முதல் 30 மின்னஞ்சல்கள் வருகின்றன. இப்படிக் கேட்கும் மக்களுக்கு உதவுவதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். (இதை அவர் கூறும் போதே அவருக்கு வரும் குறும்செய்தியை நம்மிடம் காட்டுகிறார். ”Hi kumar, in motercycle from chennai high way reached hotel in 12km. Million Thanks).

அதேபோல் நான் மேற்கொள்ளும் பயணங்களுக்கு சில மையக்கருத்தும் உண்டு. ”காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை” ”இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ள இடங்கள்” என்பதுபோல் பல மையக் கருத்துள்ள பயணங்கள் மேற்கொள்கையில் என்னோடு தெரிந்தவர்கள், வலைதளத்தில் அறிமுகமான நண்பர்கள் எனப் பலரும் சேர்ந்து குழுவாக சென்று வருகிறோம். மேலும் நான் பயணம் மேற்கொண்ட மாத்திரம் அல்லாமல், இப்போது எந்தெந்த சாலையில் என்னென்ன பணிகள் நடக்கிறது என சாலைகளை கண் காணிப்பது, மாநிலங்களின் சாலைவிதிகள், எத்தனை சுங்கச்சாவடி உண்டு? எவ்வளவு நுழைவுக்கட்டணம் என அனைத்து தரவுகளையும் எங்கள் கோப்புகளில் ஏற்றிவருகிறோம். முகநூலில் (பேஸ் புக்) எங்கள் பக்கத்தில் அவ்வவ்போது நடக்கும் சமீபத்திய சாலை செய்திகளை தரவேற்றி வருகிறோம். உங்கள் குழந்தைகள் பரிட்சைக்கு படிக்கும் போது உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் சொல்லித்தர மாட்டீர்களா? அதில் வெற்றி பெற்றால் என்ன மகிழ்ச்சியிருக்குமோ அதுபோலத் தான் இதுவும். அந்த மகிழ்ச்சிதான் எங்களுக்கும்.

அவ்வப்போது நாங்கள், எங்கள் என பன்மையில் குறிப்பிடுகிறீர்களே. இந்த தகவல்களை சேகரிக்க ஏதேனும் குழு உள்ளதா?

1995இல் நான் கார் ஒன்று வாங்கினேன். அன்று முதல் என் பயணம் காரில் மட்டுமே தொடர்கிறது. இதைப் பார்த்த என் நண்பர்கள், ”உனக்கு குடும்பம், மனைவி என அனைத்துமே உன் காரும், பைக்கும்தானா?” என்று கேட்பார்கள். நான், ”நாம்” என்றும் ”நாங்கள்” என்றும் குறிப்பிடுவது என் காரையும் பைக்கையும்தான். நாங்கள்தான் குழுவாகச் செயல்படுகிறோம். வேறு யாரும் அல்ல.

இதற்கு முன்பு ஒரு பதிலில் முன்னேற்பாடு களுக்கு அடிமையாக விரும்பவில்லை என்று கூறினீர்கள். நம் சமுதாயத்தில் முன்னேற்பாடுகள் (டழ்ங் டப்ஹய்ய்ண்ய்ஞ்) என்பது ஒழுக்கத்தின் குறியீடு. எந்தச் செயலிலும் முன்னேற்பாடுகளும், நேர மேலாண்மையும் (பண்ம்ங் ஙஹய்ஞ்ங்ம்ங்ய்ற்) பெரிதாக சொல்லப்படுகிறதே? இதை நீங்கள் கடைப் பிடிப்பதில்லையா?

இதை நான் அப்படி பார்க்கவில்லை. அது என் நம்பிக்கை. குறித்த நேரத்தில் சரியான உணவகத்தை, தங்கும் இடத்தை பிடிக்க முடியும் என்று நம்பிக்கைதான் காரணம். ஏதோ ஒரு நாள் தற்காலிகமாக செய்யும் முன்னேற்பாடுகளுக்குத் தான் அடிமையாக விரும்பவில்லையே தவிர இத்தனை நம்பிக்கையாக சொல்வதற்குப்பின் பல ஆண்டுகள் கடும் உழைப்பு இருக்கிறது. மிகக் கடுமையான நேர மேலாண்மையிருக்கிறது.

எந்த நேரத்தில் வண்டியை எடுக்க வேண்டும், எந்த வேகத்தில் செல்லவேண்டும் என்று கணித்த பின்பே பயணத்தை துவக்குகிறேன். என்னோடு பயணத்தில் பங்கேற்பவர்கள் என்னை ஒரு ”ஆர்மி மேன்” என்று கூறுவார்கள். அந்தளவு கடுமையாக நடந்து கொள்வேன்.

நேர மேலாண்மை பயணங்களில் அத்தனை முக்கியமானது. உதாரணமாக, நான் மைசூரிலிருந்து கோவைக்கு திம்பம் வழியாகச் செல்கிறேன் என்றால் மாலை கடப்பதற்குள் அங்கு சென்று விடவேண்டும்.

இல்லை, இரவு வேளைகளில் இங்கு 7, 8 எருமையும் யானையும் அநாயசமாக சுற்றித் திரியும். காஷ்மீர் போன்ற பகுதிகளுக்குச் செல்வதென்றால் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவில்லை என்றால் பல அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும்.

சமீபத்தில் லடாக் பகுதிக்கு சென்றிருந்தோம். என்னோடு பயணம் வந்தவர்கள் மொத்தம் 28 பேர். கரணம் தப்பினால் மரணம் என்ற வாசகத்திற்கு ஏற்புடைய பாதை அது. இறுதியில் பயணத்தை நிறைவு செய்தவர் எண்ணிக்கை வெறும் 14. மீதம் இருந்தவர்களால் பயணத்தை தொடர முடிவதில்லை.

குறித்த நேரத்தில் உறங்கி எழ வேண்டும். அந்த சமயங்களில், ”நான் என் வீட்டில் இந்த நேரத்தில்தான் எழுவேன். இந்த நேரத்தில்தான் நான் காலைக்கடன்களை முடிப்பேன். இந்த நேரத்தில்தான் உண்பேன்” என்றால் நீங்கள் உணவருந்துங்கள் என்று கூறிவிட்டு நான் என் பயணத்தைத் தொடர ஆரம்பித்துவிடுவேன்.

ஏனென்றால் என்னை நம்பி வந்தவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். குறித்த நேரத்தில் அவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும். என்னோடு இருக்கும்வரை பாதுகாப்பாக உணர வேண்டும்.

இதுபோன்ற அசாதாரணமான திட்ட மிடலுக்கு மிகுந்த உழைப்பு தேவை. அந்த உழைப்பும் நம்பிக்கையும் இருப்பதால் எனக்கு தற்காலிக முன்னேற்பாடுகள் தேவையாக இருப்பதில்லை.

உங்கள் தொழிலில் நீங்கள் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து சொல்லுங்கள்?

நம்மில் பெரும்பாலானவர்களின் மனநிலை மிகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள்தான் செயல் படுகிறது. 24 வயதில் ஒரு பணியில் சம்பளம் வாங்கு கிறார்கள் என்றால் 60 வயதில் பென்ஷன் வாங்கு வதும் அதே பணியில்தான். புதிய முயற்சிகளை யாரும் செய்துபார்க்க முன் வருவதில்லை.

முதலில் ஒரு அக்கவுண்டன்டாக பணியைத் துவக்கினேன். மிக இளைய வயதில் பைனான்ஸியல் கண்ட்ரோலராக (ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப்ப்ங்ழ்) உயர்ந்தேன். பின்பு ஆடிட்டராய், வெளி நாட்டு வங்கிகளுக்கு மெர்சண்ட் பேங்கராய் (ஙங்ழ்ஸ்ரீட்ஹய்ற் ஆஹய்ந்ங்ழ்) வளர்ந்து இன்று ரினிவல் கன்சல்டிங் (தங்ய்ங்ஜ்ங்ப் இர்ய்ள்ன்ப்ற்ண்ய்ஞ்) நிறுவனத்தைத் துவக்கியுள்ளேன். அதற்காக என் வாழ்வில் தடைகளே இல்லை என்பது இல்லை.

சில நேரங்களில் பெருத்த அடியை சந்தித்திருக்கிறேன். மேல் எழவே முடியாத அளவு தோல்விகள் வந்ததுண்டு. ஆனால் எனக்கு அது ஒரு பெரும்பொருட்டாக இருக்கவில்லை. அதுவும் வாழ்வின் ஒரு அங்கமாகவே தெரிந்தது. இன்று இந்தியச் சாலைகள் குறித்த பரிச்சயம் இருப்பதால் நேவிகேட்டிங் கன்சல்டன்டாக (சஹஸ்ண்ஞ்ஹற்ர்ழ்ள் இர்ய்ள்ன்ப்ற்ண்ய்ஞ்) இருப்பதற்கு சில நிறுவனங்கள் அழைக்கத் துவங்கியிருக்கின்றன.

உங்கள் வருங்காலக் கனவு?

நான் வாழ்வை எங்கோ துவங்கி இன்று எங்கோ இருக்கிறேன். வருங்காலத்தில் நான் எங்கிருப்பேன் என்பதை கணிக்கமுடியாது. ஆனால் இந்தியச் சாலைகளில் பயணம் செய்தது போல் வெளிநாடுகளிலும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு.

உங்களைப் போல் விரும்பிய துறையில் வெற்றி பெறும் முனைப்புடன் இயங்கி வரும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

முந்தைய தலைமுறை போல் இல்லை இந்தத் தலைமுறை. இப்போது இவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இன்றைய இளம்தம்பதிகள் சேர்ந்தே உழைக்கிறார்கள். எதையும் செய்யும் அசாத்தியமான தைரியம் அவர்களிடம் இருக்கிறது. விரும்பியதில் வெற்றி பெற திடமான அர்ப்பணிப்பும் தீராத ஆசையும் எடுத்துக்கொண்ட செயலை எப்படியும் முடித்தே தீர வேண்டும் என்ற தீவிரமும் இருந்தால் விரும்பியதை அடையலாம் என்று மிக இயல்பாகக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.