திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

– தொடர்

-சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

வேலாயுதம் தொடுத்தார் நூலாயுதம்

கனவுகளோடும் கவிதைகளோடும் விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு.வேலாயுதத்தைச் சந்தித்தபோது “தம்பி! வாங்க!” என்று முகத்தில் புன்னகை மின்னலிட நெஞ்சம் நிறைய வரவேற்றார். “நான் கவிதை எழுதியிருக்கிறேன். அதை உங்களிடம் காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என்று கவிதை நோட்டை நீட்டினேன். Continue Reading »

உஷார் உள்ளே பார்

– சோம. வள்ளியப்பன்

-தொடர்

ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாரளமாக உதவியவர். பல சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும்கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர்.

என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ மட்டமாக எழுதிவிட்டார்கள். அவர் பெயரைப் போடவில்லையே தவிர மற்றபடி அவர்கள் விவரித்த விதத்தில் அவர் இன்னார் என்று சுலபமாக ஊகிக்கும்படி எழுதியிருந்தார்கள். அவர் பதவி உயர்வுகள் பெற சில கேவலமான வழி முறைகளை பின்பற்றுகிறார் என்பதுதான் அவரைப் பற்றி எழுதியிருந்த விபரம். Continue Reading »

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா

மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள்.

கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டியபோது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்!
Continue Reading »

வெற்றி வெளிச்சம்

– இயகோகா சுப்பிரமணியம்

இருளைத் தாண்ட உறவும் நட்பும் உதவும்

-தொடர்

தொழில், பணி, சேவை – இந்த மூன்றின் வெற்றிக்குமே அடிப்படையான ஒரு தேவை மனித உறவு. எல்லாரிடமும் நன்றாகப் பழக வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும் என்பது உறவு மேம்பாட்டுக்கான நல்வழி.

ஆனால் தேவையான சிலரிடம் மட்டும் நல்ல முகத்தையும், இனிமையையும், பணிவையும் காட்டி விட்டு, கோபம், வெறுப்பு, அலட்சியம் போன்ற முகமூடிகளை இன்னொரு சாராரிடம் காட்டி வெற்றிகரமாக நடித்து வெற்றி பெறுபவர்களும் உண்டு.

ஆனால் யாரிடமுமே உறவு, நட்பு, அனுசரணை இல்லாமல் வெற்றிகரமாகச் செயல்படுவது இயலாத காரியம்.

அனைவரிடமும் அன்பு பாராட்டிய தருமன், இறுதிவெற்றி அடைந்தபோது பாரதக்கதை முடிந்து அனைவர்க்கும் மகிழ்வளித்தது.

Continue Reading »

உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்!
அனுபவங்கள்!
ஆளுமைகள்!!

– மரபின் மைந்தன் ம. முத்தையா

உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக முன்வைப்பு டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய் என்பது. விளம்பர நிறுவனங்களைப் பொறுத்த வரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட தங்கள் இடத்திற்கு அவர்களை அழைத்து புதுமையான ஏற்பாடுகள் செய்வதில் கணேஷ் பாலிகா கைதேர்ந்தவர்.

ஒருமுறை உணவகம் ஒன்றின் விளம்பரங்களுக்கான முன்வைப்பு சந்திப்பை அவர் மிகப் புதுமையாகத் திட்டமிட்டார். அலுவலக மொட்டை மாடியிலேயே உணவகச் சூழலை உருவமைத்தார். விளம்பர முன்வைப்பு என்றால் அதில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. எந்தெந்த ஊடகங் களுக்கு எவ்வளவு சதவிகிதம் ஒதுக்கலாம் என்பது தொடங்கி பல அம்சங்கள் காரணகாரியங்களுடன் விளக்கப்படும். Continue Reading »

மனமே உலகின் முதல் கணினி

– தமிழில் கனகதூரிகா

என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர்

பார்த்தல், கேட்டல், உணர்தல் இந்த மூன்றும்தான் நம் மனம் உள்வாங்கி கொள்கிற செய்திகளின் அடித்தளம். இந்த மூன்றையும் அடிப்படையாய் கொண்டு செய்திகள் தொகுக்கப் பட்ட அடுத்த நொடியே மனம் அதை சேகரிக்கத் துவங்குகிறது. சேகரிக்கத் துவங்கிய அடுத்த தருணமே மனம் அதை பல்வேறு விதமாய் பகுக்கிறது.
அந்தப் பாகுபாடுகளில் சில இந்த மாதம் முதல்… Continue Reading »

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

சாதிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கம்

– சினேகலதா

– தொடர்

விழிப்புணர்வுடன் கூடிய துணிச்சலுக்கே விவேகம் என்று பெயர். மார்க்கெட்டிங் துறையில் இந்தக் கலவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. மார்க்கெட்டிங் உலகின் வினோதமான உண்மை என்னவெனில் ஒரு வட்டாரத்தில் வெகு பிரபலமாக இருக்கும் பெயர் வேறொரு வட்டாரத்தில் அறிமுக நிலையில் மட்டுமே இருக்கும். தான் தலையில் சுமக்கும் கிரீடங்கள் கண்ணுக்குத் தெரியாத பிரதேசத்தில் அறிமுக நிலையில் ஓர் அரசரை நிறுத்தினால் அவஸ்தைப்படுவாரா இல்லையா? Continue Reading »

வெற்றி வெளிச்சம்

– இயகோகா சுப்பிரமணியம்

தொடர்

வரி செலுத்தவதால் வரும் தொழில்

வரிகள் – பலதரப்பட்டவை, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபட்டவை. எப்படி வரிகள் விதிக்கப்படுகின்றன, வசூலிக்கப் படுகின்றன, வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பவையும் நாட்டுக்கு நாடு வேறு பட்டவை. ஆனால் அடிப்படையில் நாட்டுக்கு வருமானம் என்பது அதிகமாக வரிகளின் மூலமாகத்தான் உண்டாகிறது. Continue Reading »

இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்

– கிருஷ்ண வரதராஜன்

தொடர்

மேலதிக விபரங்களுக்கு: பிரபல நிறுவனம் ஒன்று தங்கள் பணியாளர்களை உற்சாகப்படுத்த ஒரு செயல் திட்டம் வகுத்துத்தருமாறு எங்கள் கன்சல்டன்ஸியிடம் கேட்டிருந்தது.

அதற்கு நாங்கள் வகுத்தளித்த திட்டம்தான் இரட்டைச்சம்பளம்.

ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறப்பாக வேலை செய்யும் ஒருவருக்கு அவர் வாங்கும் சம்பளத்தை போல இன்னொரு மடங்கு பரிசு. அதாவது இரட்டைச்சம்பளம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் உங்கள் நிறுவனத்தில் கூட ஒரு நாள் நடைமுறைப்படுத்தப்படலாம். அது வரை காத்திருக்காமல் இப்போதே இரட்டை சம்பளம் பெறுவது எப்படி? என்று யோசிப்போம்.

ஒரு சிலர் வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்கினார்களோ அதே அளவிலேயே கடைசி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே நன்றாக வேலை செய்கிறார் என்ற பெயரோடு கூடுதல் சம்பளத்தையும் பெறுவார்கள்.

சம்பள உயர்வை எதிர்பார்க்கும் முன் உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், ‘என் வேலைத்திறனில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது?’

அடுத்து எதற்காக சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு, எல்லோரும் சம்பளம் செய்யும் வேலைக்காக வழங்கப்படுகிறது என்று சொல்வார்கள். உண்மையில் சம்பளம் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல காட்டும் விசுவாசத்திற்காகவும் வழங்கப்படுகிறது.

உங்கள் வளர்ச்சியை மட்டும் யோசிக்காமல் நிறுவன வளர்ச்சியையும் யோசியுங்கள். அப்படி யோசித்து செயல்பட்டால் மட்டுமே அது உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

இப்படியெல்லாம் செயல்பட்டால் உங்கள் சம்பள உயர்வுக்கு உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அத்தனை பேரும் பேசுவார்கள்.

உங்களின் சம்பள உயர்விற்காக மற்றவர்கள் பேசும் அளவிற்கு நீங்கள் உழைத்திருந்தால் உங்களுக்கு இரட்டை சம்பளம் உறுதி.

சம்பள உயர்வை கையில் வாங்கியவுடன் சந்தோஷப்படுபவர்கள் அடுத்த நிமிடம் யாருடனாவது ஒப்பிட்டுப்பார்த்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை முழுவதும் ரகசியமாக்கிவிட்டது.

உங்களுக்கு இரட்டை சம்பளம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எப்போதும் மற்றவர்களின் திறமையோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சம்பளத்தோடு ஒப்பிட்டு போட்டி போடாதீர்கள். உங்கள் திறமை வளர வளர உங்கள் சம்பளமும் உயரும்.

நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தினை கணக்கு பார்த்து வேலை செய்யாதீர்கள் அப்படி செய்தால் நிறுவனமும் உங்கள் சம்பளத்தில் கணக்கு பார்க்கும்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது உங்களுக்கு குறைவாக இருந்தால் சம்பள உயர்விற்காக பேசும் போது ஒருபோதும் கோபமாக அல்லது ஆதங்கமாக பேசாதீர்கள். மற்றவர்களை ஒப்பிட்டும் கேட்காதீர்கள்.

“இருபதாயிரம் சம்பளம் வாங்குமளவிற்கு நான் உழைத்து உயர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் நான் கூடுதல் பணிகள் செய்யத்தயாராக இருக்கிறேன். இன்னும் என்னை என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல கேளுங்கள்.

இப்படி கேட்டால், தன்மையாக நீங்கள் நடந்து கொண்ட விதத்திலேயே நீங்கள் கேட்டது கிடைக்கும்.

நிறுவனம் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு சம்பள உயர்விற்குத் தயாராகுங்கள். உங்கள் சம்பளம் இரட்டைச் சம்பளமாக வாழ்த்துக்கள்.

மனமே உலகின் முதல் கணினி

திரு. என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன்

– தொடர்

புரோகிராம் 1

சூழ்நிலைகளை புறம் தள்ளி, நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் நம்முடைய சொந்த தட்பவெட்பத்தை மட்டும் சுமந்து செல்வோம்.

புரோகிராம் 2

சமீபத்தில் இந்தியா ஐ.சி.சி உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆட்டத்தின் இறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றி ரன்களை குவித்த அந்த தருணத்தில் நீங்கள், நான், நாம் அனைவரும் குதித்து கொண்டாடினோம். இதில் எது நம் அனைவரும் ஒன்றாக சேர்ந்தது..? விளையாட்டா? நான் அனைவரும் இந்தியர் என்ற மனநிலையா? அல்லது உலகக் கோப்பை என்ற கனவா…? இல்லை, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த ஓர் கலவையா? என்னுடைய பார்வையில் அதற்குக் காரணம் நம் அனைவரிடையேவும் ஒருமித்து இருந்த அந்த உணர்வு. இந்தியாவிற்கு… இந்தியாவில் உலகக் கோப்பை கிடைக்க வேண்டும் என்ற உணர்வு. நம் உணர்வுகளுக்கு கற்பனையில் நாம் கொடுத்திருந்த உருவமும், அதற்கு ஆதாரமாய் அமைந்த இறுதிப்போட்டியின் வெற்றிப்புள்ளிகளும் நம் உணர்வுகளை உயிர் கொள்ளவும், உற்சாகமாய் துள்ளிக்குதிக்கவும் வைத்தது. நம்மை புதிய எல்லைகளுக்கு எடுத்து சென்றது. நம் உடம்போடு ஒன்றியிருக்கும் உணர்வுகள், அவைதான் நம் அனைவரையும் அனைவரிடத்திலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுபவை. Continue Reading »