நமக்குள்ளே

இசைக்கவி ரமணன் அவர்களின் வார்த்தைகள் மிக அருமை. கூற வந்த கருத்துக்களை மிகச்சரியான வார்த்தைகளைக் கொண்டு அழகாய் விவரித்துள்ளார். படிக்கப் படிக்க மனம் ஆழ்ந்து போகிறது. அவரின் எழுத்துக்களுக்கு எனது நன்றிகள்.

பிரவீணா பிரபாகரன், கோவை.

ஒரு வாசகத்தை படித்தால் சில நொடிகளில் மறந்து போகும், ஒரு கதையை படித்தால் நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருக்கும். சிறந்த சிந்தனைகளை குட்டிக் கதைகளாக கூறுகிறது, “கான்ஃபிடன்ஸ் கார்னர்”. இந்த மாதத்தின் குட்டிக் கதைகள் அழகாக உள்ளது.
ரோஷ்ணா, ரத்தினபுரி.

மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது. மாற்றங்களின் மகிமையை மிகத்தெளிவாக உணர்த்துகிறது “மார்க்கெட்டிங் மந்திரங்கள்”. மார்க்கெட்டிங் துறையின் மகத்துவத்தை உணர இந்த கட்டுரை ஒரு அட்சய பாத்திரம். Continue Reading »

உங்கள் பக்கத்தில் யார்?

– அத்வைத் சதானந்த்

ள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. Continue Reading »

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்

-அ. தினேஷ்குமார்

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”

சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் (மய்ண்ஸ்ங்ழ்ள்ங்) பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் (இர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) ஆழ்மனம் (நன்க்ஷஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.

நன்றியுடன்

-வழக்கறிஞர். த, இராமலிங்கம்

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
என்று ஒரு திரைப்படப்பாடலில் எழுதுகிறார் கண்ணதாசன். தான் ஈன்ற குட்டி களின் மீது இயல்பாக இருக்கும் பாசம் தவிர, விலங்குகளிடத்தில், மற்ற மெல்லிய உணர்வுகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படி ஏதேனும் கேள்விப் பட்டால், கண்டிப்பாக அது ஒரு செய்திதான்!

மனிதனே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவன். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்றெல்லாம் எல்லைகளை விரித்துக் கொண்டவன் மனிதன்தான். Continue Reading »

நேற்று இன்று நாளை

– இசைக்கவி ரமணன்

இதுவொரு காலம் அதுவொரு காலம்
அடியில் மணலாய்க் கரைகிறதே
அதுதான் உண்மைக் காலம்

இரவும் பகலும் புகையென நீளும்
நெஞ்சில் எங்கோ கனல்கிறதே
அதுதான் உண்மையில் வாழும்!

காலம் என்றால் என்ன?
சென்றுவிட்ட நேற்றா? சென்று கொண்டிருக்கின்ற இன்றா? வந்து செல்லப் போகிற நாளையா? இன்று என்றால் இன்றில் எந்தப் பொழுது? எந்தக் கணம்? Continue Reading »

ஜவஹர்லால் நேரு – வாசிப்பில் நேசிப்பு

ஜவஹர்லால் நேரு- – வாசிப்பில் நேசிப்பு

ழந்தைகளால் மட்டுமின்றி குவலயத்தாலும் பெரிதும் நேசிக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு வாசிப்பில் வல்லவராகத் திகழ்ந்தார். அவர் லிஃப்டில் பயணம் செய்த பொழுதொன்றில் மின்வெட்டு காரணமாய் லிஃப்ட் நின்று விட்டது. தொழில்நுட்பம் பெருகியிராத அந்தக் காலத்தில் கதவைத் திறக்க நேரமாகிவிட்டது. வியர்வையில் குளித்தபடி வெளியேவந்த நேரு அமைதியாகச் சொன்னாராம், “இங்கே சில புத்தகங்களை வைத்துவிடுங்கள். இதுபோல் நேர்ந்தால் மின்சாரம் திரும்பும்வரை புத்தகம் படிக்கலாம். நேரம் வீணாகாது!!”

நவம்பரில் பிறந்தநாள் காணும் நேருவே! உங்களுக்குத் தெரியுமா? இப்போதெல்லாம் மின்சாரம் போய்த் திரும்பும் இடைவெளியில் புத்தகம் படிப்ப தென்ன… ஒரு புத்தகமே எழுதி விடலாம்.

கல்யாணப் பரிசு

– கிருஷ்ணன் நம்பி

திருமண அழைப்பிதழை பார்த்ததும் தம்பதிகளுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு, ‘என்ன பரிசு தரலாம்?’ என்று யோசித்தார்.

திருமண ஏற்பாடுகளும் அதைப் பற்றிய இனிய நினைவுகளுமே வருபவர்களுக்கு பரிசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து திருமண ஏற்பாட்டில் நிறைய புதுமைகள் செய்திருந்தார்.

மிக நெருக்கமானவர்கள் தவிர பொதுவாக திருமணத்திற்கு வரும் அனைவரும் ஏதோ ஒரு அவசரத்தில்தான் வருகை தருகிறார்கள். அப்படி வருபவர்கள் விரைவாக சாப்பிட்டு விட்டு விரைவாக பரிசுகளை தந்துவிட்டு சென்று விடுவார்கள். ‘அப்பாடா அட்டெண்ட் பண்ணி யாச்சு’ என்று கிளம்புகிற எண்ணத்திற்கு பதில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகலாம் என்று எண்ண வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில ஏற்பாடுகள் செய்திருந்தார். Continue Reading »

இன்று புதிதாய் பிறப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம்

பலமுறை பயன்படுத்தப்படும் இசைத்தட்டு எப்படியோ கீறல் விழுந்துவிடுகிறது.

கீறல் விழுந்தபின்னர்தான் நீண்ட நாட்களாய் ஒன்றையே திரும்பப் திரும்பப் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம்.

பழமைகளை போற்றிப் புகழ்ந்துக் கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை.

புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால் பாதையின் துன்பங்களைக் கண்டதும் பாதிவழியிலே பலர் தங்களின் புதுமையை நோக்கிய பயணத்தை மறந்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும், வசதி வாய்ப்புகளும் ஏதோ சில குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே வசப்படுவதாய், பயன் படுவதாய் இருக்கும் நிலையில் எல்லோருக்குமே இவை வசப்பட வேண்டுமே என கவலைப் படுவோரும் அதற்கான முயற்சிகளில் இறங்குவோரும் துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல் தங்களின் பயணத்தைத் தொடர்கிறார்கள். Continue Reading »

அன்று இன்று

அவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு சகோதரர் களையும் பார்க்கும் பொறுப்பும் அவருடைய இளம்தாய்க்கு வந்தது, அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஒரே இரவில் முற்றிலுமாக மாறியது. ஆடைகள் தைத்தும், கை வேலைப்பாடுகள் செய்தும் வருமானம் ஈட்டி வந்தனர். Continue Reading »

பத்து நிமிடத்தில் வெற்றி

– அனுராஜன்

வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லது எப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றி பெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.

பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டை பார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று தோன்றும். Continue Reading »