திருப்தி என்பது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்

நேர்காணல்

-சோமவள்ளியப்பன்

திரு. சோம. வள்ளியப்பன் பிரபல தன்முனைப்புப் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் நாளும் புதுப்புது உத்திகளையும், வழிகாட்டுதல் களையும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் இருப்பவர். இன்று மிக அதிக அளவில் விற்பனையில் இருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.

Continue Reading »

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

இந்த வாரம் திலகவதி ஐ.பி.எஸ்.

இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன்
உரையாடுகிறார்கள்
பிரபலங்கள்)

நான் முதன்முதலில் சென்னைக்கு என் இளநிலை பட்டமளிப்பு விழாவிற்காக தந்தையோடு வந்தேன். நகரின் பிரம்மாண்ட கட்டிடங்கள், புதிய நாகரீகம், அசுர வளர்ச்சி அடைந்திருந்த போக்குவரத்து என அனைத்தும் மிரட்சிக்குள்ளாக்கின. சென்னை எனும் மாபெரும் நகரம் கொடுத்த மிரட்சியில் என முதுநிலையை சென்னையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக்கூட மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். Continue Reading »

எட்டு லட்சம் கி.மீ பயணம் நமது தேசத்தின் நடமாடும் வரைபடம் H.V.குமார்

நேர்காணல்

8 லட்சம் கி.மீ பயணம் செய்தவர்…

கணக்கிலடங்காத பாதைகளை வெளிக்கொணர்ந்தவர்…

இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளும் இவருக்கு உள்ளங்கை ரேகை.

லிவிங் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஹெச்.வி.குமார்…

நேர்காணல்களில் வழக்கமாக கேட்கப்படும் எந்த கேள்விகளையும் இவரிடம் கேட்கவே முடிவதில்லை. வாழ்க்கை குறித்தும் இவர் புரிந்திருக்கும் சாதனை குறித்தும் இவருக்கு இருக்கும் பார்வை வித்தியாசமானது. இந்தியாவின் எந்த மூலையில் நின்று இவரை தொடர்பு கொண்டாலும் அங்கிருந்து நாம் செல்வதற்கான சிறந்த வழியை நொடிப் பொழுதில் சொல்லி விடுகிறார். Continue Reading »

நம்பிக்கை தான் என் பலம்

நேர்காணல்: கனகலட்சுமி

டாக்டர். அம்பேத்கார் சட்டக் கல்லூரியின் முதல் திரு. ராமமூர்த்தி அவர்களுடனான நேர்காணல்

உங்களைப் பற்றி…

நாங்கள் நான்கு தலைமுறைகளாகவே பெங்களூரில் வசித்து வருகிறோம். என் தகப்பனார் பென்னி ஆலையில் வேலை பார்த்து வந்தார். என் கல்லூரி படிப்பு முடிந்ததும் அதே ஆலையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆலையிலே பணிபுரிந்தவாறே டிப்ளமோ படிப்பு ஒன்று முடித்தேன். இருப்பினும் நான் செய்து வந்த பணியில் கல்விக்கும், தகுதிக்கும் முக்கியத்துவம் இருப்பது போல தெரியவில்லை.

என் கல்வி சார்ந்த அறிவு முடக்கப்படுவது போல் உணர்ந்ததால் அந்த வேலையை துறந்தேன். அப்போது எத்தனை வகையான அரசுத்தேர்வு நடைபெற்றதோ அனைத்திலும் பங்கேற்றிருக்கிறேன், வங்கி தேர்வு, சிபிஐ தேர்வு என அனைத்தையும் எழுதினேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏதோ ஒரு அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற தட்டச்சு தேர்வு நடத்தினார்கள். நன்றாக பயிற்சி எடுத்திருந்த போதும் தேர்வு நாள் அன்று ஒரு பெரிய அறையில் தேர்வு துவங்குவதாக அறிவிக்கப்பட்டதும் என்னைச் சுற்றி அமர்ந்திருந்த மற்ற மாணவர்கள் வேகமாக தட்டச்சு செய்வது கண்டு பதட்டமாகி போனது. என்னால் கொடுக்கப்பட்ட நேரத்தில் முழுவதுமாக தட்டச்சு செய்ய இயலவில்லை.

நேரம் முடியப் போவதால், இந்தத் தேர்வுத்தாளை யார் முழுவதுமாக படிக்க போகிறார்கள் என்று எண்ணி இடையே இரண்டு வரிகளை விட்டுவிட்டு சட்டென்று பத்தியின் இறுதி வரிகளை தட்டச்சு செய்து தேர்வை முடித்தேன். அப்போது ஒரு மாணவ மனநிலையில் நான் செய்த தவறு அது.

வெளியே வந்ததும் ஏற்கெனவே தேர்வாகியிருந்த மாணவர்கள் நான் செய்தது தவறு என்று சுட்டியபோது மிக வருந்தினேன். எதிர்பார்த்ததை போல அந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதேபோல் சிபிஐ தேர்வில் மிக நன்றாக எழுதி மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். 80 மதிப்பெண் இருந்தால் தேர்வு பெறலாம் என்ற நிலையில் நான் வாங்கியிருந்த மதிப்பெண் 78. எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒருமுறைகூட நம்பிக்கையை தவறவிட்டது இல்லை. அன்று அனைத்து தேர்வுகளுக்காகவும் படித்த அறிவு இன்றைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

வக்கீல் தொழிலை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள். அது உங்களுக்கு சுலபமாக இருந்ததா?

வேலைக்காக எத்தனையோ நபர்களுடன் தினம் தினம் போட்டி போட வேண்டிய கட்டாயம் இருந்தது. நான் என் நண்பர்கள் மூன்று பேர். ஒன்றாகவே இருப்போம். அடுத்தடுத்து வேலை கிடைக்கவும் ஒவ்வொருவராக சென்ற பின் நாம் ஏன் சுயமாக தொழில் துவங்க கூடாது? என்ற எண்ணம் வந்தது. ஆனால் முதலீடு இல்லாத தொழிலாகவும் இருக்க வேண்டும். எனவே வக்கீலுக்குப் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அந்த வாழ்க்கையும் மிகச்சுலபமாக இருந்து விடவில்லை. நான் படித்த அனைத்தையும் விட்டு விட்டு வக்கீலுக்கு படிக்கத் துவங்கியபோது பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தேன். அவர்களைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியாக நான் மிகவும் சிரமப்படுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் அப்போதே வீக்கோ நிறுவனத்தின் பொருள்களை ஏஜென்சி போல் எடுத்து விற்பனை செய்வேன். அதற்கு எனக்கு தேவையாய் இருந்தது 3 அல்லது 4 மணி நேரம் தான். அதற்குள் கொடுக்கப்பட்ட இலக்கை முடித்து விடுவேன்.

விற்பனையின் தந்திரமே க்ளையண்டு களுக்கு நம்மீது நம்பிக்கை வரும் வண்ணம் பேசி அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பதுதான். இந்த வேலையை செய்ய பெட்ரோல் அலவன்ஸ் என்று அப்போது 10 ரூபாய் கொடுப்பார்கள். அதில் 5 ரூபாய் பெட்ரோல் போட்டது போக மீதி 5 ரூபாயில் என் செலவுகளை பார்த்துக் கொள்வேன். என் சேமிப்பிற்கும் செலவிற்கும் அந்த 5 ரூபாய் மிகவும் உந்துதலாக இருந்தது. அத்தோடு நான் வழக்கறிஞராக பெங்களூர் நீதிமன்றத்தில் பயிற்சி செய்தபோது எனக்குத் தெரிந்த கல்லூரி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன். எனக்கு கிடைத்த மூத்த வழக்கறிஞர்களும் நான் அவர்களுக்கு உதவியாக இருந்ததால் அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்தனர்.

ஒரு சாதாரண வழக்கறிஞராக பணியைத் துவங்கிய நீங்கள் இன்று பல சாதனையாளர் களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிக நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

அன்றைய காலகட்டத்தில் பெங்களூரில் சிட்டி மார்க்கெட்டில், தெருவோரமாக கடைகள் வைத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும், பிரச்சனைகளையும் கையில் எடுத்து அவர்களுக்கான தீர்வை இலவசமாக செய்து கொடுத்தேன். இது அப்போதைய பத்திரிகைகளில் வெளியாகி எனக்கு ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியது. அப்போது கர்நாடகாவில் அரசியல் கட்சி ஒன்று உருவானது. காலப்போக்கில் அக்கட்சிக்கு தலைவராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுதவிர தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளின் போதும், முக்கிய திருப்பங்களின் போதும் இரண்டு மாநில முதல்வர்களிடையேயும் தூதுவராக குழுவில் இடம் பெற்றிருந்தேன்.
இவர்கள் அனைவரிடமும் நெருக்கமாக இருக்க ஒரே காரணம் அணுகு முறைதான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் பண்புதான்.

இந்தத் தொழிலில் நீங்கள் சந்திந்த சவால்கள் என்னென்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

எனக்கு பலமுறை பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் வந்ததுண்டு. மக்கள் பிரச்சனையில் இருந்து ஒதுங்கினால் பணம் தருகிறோம் என்றுகூட சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு ஒரு சிறையில் தவறு செய்யாமல் அடைக்கப்பட்டிருந்த 127 பேரை பற்றிய வழக்கை நான் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அது குறித்த தகவல்களை வெளியிட்டேன். பலரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதபோது ஏசியன் ஏஜ் என்ற பத்திரிகை அது குறித்து செய்தி வெளியிட்டது. அவர்களுக்கு விடுதலை வாங்கித்தர உதவியது. இப்படி பல சவால்கள் இருந்தபோதும் என் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்ததில்லை. அதுதான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணையாக இருந்தது.

வெற்றிகரமாக வழக்கறிஞர் தொழில் செய்து வந்த நீங்கள் ஏன் கல்லூரி ஆரம்பிக்க விரும்பினீர்கள்?

நான் வழக்கறிஞராக இருந்திருந்தால் 4 வக்கீல்களைத்தான் உருவாக்கியிருக்க முடியும். ஆசிரியராக இருப்பதால் இப்போது வருடத்திற்கு 100 மாணவர்கள் வீதம் பலரையும் உருவாக்கி கொண்டேயிருக்க முடியும் என்ற எண்ணம்தான்.
உங்கள் கல்லூரி உருவான விதம் குறித்து…

நான் கல்லூரி ஆரம்பிக்க முடிவு செய்தபோது என்னிடம் இருந்தது வெறும் 250 ரூபாய். அதில், பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய கல்லூரி துவங்குவதற் கான விண்ணப்பப் படிவம் வாங்க மட்டுமே முடிந்தது. அத்தோடு ஒரு லட்சம் ரூபாய்க்கு டிடி எடுக்க வேண்டும் மற்றும் கல்லூரி துவங்க இடம் வேண்டும். ஆனால் ஆழ்மனதில் ஒரு வேகம் இருந்தது, எப்படியும் சாதித்து விட முடியும் என்று. 48 மணிநேரத்திற்குள் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் சிறு தொகையாக கேட்டேன்.

நான் பணத்தை கேட்க மிகவும் கூச்சப் பட்ட போதும், நான் என்றோ அவர்களுக்கு செய்த உதவிகளாலும் நல்ல உறவுகளாலும் யாரும் மறுக்கவில்லை. கிடைத்த பணத்தை கொண்டு டிடி எடுத்துக் கொண்டேன். சட்ட புத்தகங்களை கல்லூரிக்காக எனக்கு தெரிந்த இடத்தில் இருந்த மாதக்கடனுக்கு வாங்கினேன். 5 அறைகள் கொண்ட ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அப்போது எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு 6 லட்சம் கொடுத்து உதவ முன்வந்தார். ஆனால் கொடுத்த சில ஆண்டுகளில் எல்லாம் அதை இரண்டு மடங்காக வட்டியுடன் திரும்பக் கேட்டார். அவர் கேட்ட தொகை 18 லட்சம். சிறு தொகை கொடுத்துதவ நண்பர்கள் இருந்தாலும், இது பெரும் தொகையாக இருந்தது. அப்போது வங்கியில் பணிபுரியும் என் நண்பர் நினைவுக்கு வந்தார். அவர் மூலமாக என்னிடம் இருந்த சில நிலப் பத்திரங்களை வைத்து அவர் கடனை அடைத்தேன்.

இந்தக் கடனை அடைக்க நான் எடுத்துக்கொண்ட 5 நாட்களுக்குள் நான் பல வன்முறைகளை, அச்சுறுத்தங்களை சந்தித்தேன். அத்தனையையும் கடந்து வர எனக்கு உறுதுணையாக இருந்தது விடாமுயற்சிதான்.

அந்தக் காலகட்டத்தில் உங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?

கல்லூரி துவங்கியபோது சிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்தேன். அதைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகள், விசாரணைகளுக்கு நானே பதிலளித்தேன். இங்கு படிக்கும், பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தரமான கல்வி மற்றும் அனைத்து வசதிகளும் தரமான முறையில் செய்து கொடுப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டேன். நான் வகுப்பில் சந்திக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் என்னையே காண விரும்புகிறேன். கல்லூரியை வெற்றிகரமாக நடந்த பல சிரமங்களை சந்திக்கிறபோதும் சில சமயங்களில் சோர்வடைவதுண்டு. அப்போ தெல்லாம் இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கல்லூரியின் துணை முதல்வர் ஜோதி. இத்தனை சிரமங்களிடையே என்னை வேதனைக்குள்ளாக்கிய விஷயம் எத்தனை நல்லவர்களாக நாம் சமூகத்தில் நடந்து கொண்டாலும், சில நேரம் வாழ்க்கை நம்மை மோசமாக நடத்துகிறது. இருப்பினும் அந்த தடைக்கற்கள்தான் இன்று எங்கள் வளர்ச்சியின் அடித்தளம்.

சூழ்நிலை கைதிகளாய் இன்றும் அடிமட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் மேலும் உயர நீங்கள் கூறுவது?

இது இயலாத என்ற எண்ணம் மட்டும் ஆகாது. நம்பிக்கை 99 சதவீதமும் 1 சதவீதம் முதலீடும் இருந்தால் போதும் என்பது என் அனுபவம். யாராக இருந்தாலும் எந்தத் தொழிலையும் செய்ய இயலும் என்ற உத்வேகம் வேண்டும். கல்வி அடிப்படை இல்லாத எந்த வேலையையும் நான் இப்போதும் செய்ய தயாராக இருக்கிறேன். இப்போதும் என்னால் என் கழுத்தில் இருக்கும் டையுடன் ரோட்டில் தெருவோர கடைகள் போட்டு வியாபாரம் செய்யமுடியும். இந்த முனைப்புத்தான் அடிமட்டத்தில் இருந்து நம்மை உயர்த்தும் உக்தி.

முன்பொரு கேள்வியில் கல்வித் தகுதிக்கு அறிவுக்கும் முக்கியத்துவம் இல்லாததால் ஓர் ஆலை வேலையை துறந்ததாக கூறினீர்களே?

ஆம். அடிப்படையில் நான் அந்த வேலையை நிராகரிக்கவில்லை. அதிலிருந்து உயர வேண்டும் என்ற தேடுதலும், இந்த வளர்ச்சி போதாது என்ற வேட்கையும்தான் என்னை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றது. இருக்கும் நிலையிலிருந்து மேலும் உயர வேண்டுமென்ற தேடலும், வேட்கையும் இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் தேவை.

பல மாணவர்களை உருவாக்குகிறீர்கள். இன்றைய தலைமுறையோடு தொடர்ந்து தொடர்ப்பில் இருக்கும் நீங்கள் அவர்களுக்கு சொல்ல நினைப்பது?

நான் எப்போதும் என் மாணவர்களுக்கு சொல்வது, என்னை பெரிதும் ஈர்த்தவர் தமன்ன செட்டியாரின் கருத்துக்களைத்தான். அவர் எழுதிய நூல்களும், நம்பிக்கை விதைக்கும் கருத்துகளும்தான் என் வெற்றிக்கு துணை நிற்பவை. ஒரு முறை அவர் நூலை படித்து கொண்டிருந்தபோது அவரிடம் பேச ஆவலாக இருந்தது. அந்தப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருந்த எண்ணை அழைத்த போது அவரே தொலைபேசியை எடுத்தார்.

நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் சட்டென்று பேசியதில் என்னால் பேச முடியவில்லை. தபால் மூலம் தொடர்பு கொண்டேன். எனக்கு அவர்க்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அவை ஊட்டிய நம்பிக்கையைத்தான் இளைஞர் களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் வழக்கறிஞர் தொழிலின் மிகுந்த புகழ்பெற்றவர் ராம்ஜெத்மலானி. என்னால் ஒரு ராம்ஜெத்மலானியாக உயர முடியாவிட்டாலும் அவருக்கு நண்பர் ஆகும் அளவுக்கு உயர முடிந்துள்ளது. நம்பிக்கைதான் நாம் போகும் பாதையின் கைவிளக்கு. இதைத்தான் என் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் என்று பேட்டியை முடித்து கொண்டார்.

புத்தகம் பிடிக்கும்..

விஜயா பதிப்பகம் திரு. வேலாயுதம் நேர்காணல்

நேர்காணல்: கனகலஷ்மி

இன்று கோவையின் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலை ஒவ்வொரு குடும்பமும் தயாரிக்கிறபோது அரிசி, பருப்பு என்ற வரிசையில் புத்தகத்தையும் சேர்த்த பெருமை, ”அறிவுலகவாதிகளின் அட்சயபாத்திரம்” எனும் கோவை விஜயா பதிப்பகத்திற்கு உண்டு.

புத்தகங்கள் ஒவ்வொரு முறை படிக்கிறபோதும் பல புதிய அனுபவங்களை தந்து கொண்டேயிருக்கும். அதுபோலத்தான் திரு. வேலாயுதம் அவர்களும். தமிழகத்தின் முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் இவரை ஏராளமான முறை பேட்டி கண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் கூறும் செய்திகள், புத்தகங்களை போலவே பல புதிய அனுபவங்களை நமக்குத் தருகிறது.

>>மேலும்…

உள்ளே இருப்பதை உணர்ந்தால் போதும்

நேர்காணல்

என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி எனக்கு சொந்த ஊர். மிகவும் ஏழ்மையாக குடும்பம் எங்களுடையது. என் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அம்மா வீட்டில் உள்ள நான்கு எருது களையும் ஒரு பசு மாட்டையும் பார்த்துக் கொள்வார். அவைதாம் என் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தன என்றுகூட சொல்லலாம். என்னுடைய ஒன்பதாம் வயதில் பால் விற்றுக் கொண்டிருந்தேன்.

>>மேலும்…

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

இந்த மாதம் இயக்குநர், நடிகர் திரு பாண்டியராஜன்.

(இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள்
பிரபலங்கள்)

தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். பிரேசிலில் நடைபெற்ற உலகளவிலான திரைப்பட விழாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட 55 குறும்படங்களில், ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே குறும்படம் இவருடையது. இயக்குனர், நடிகர் என்று சிநேகமாய் நகைச்சுவையாய் நமக்கு அறிமுகமான திரு.பாண்டியராஜன் அவர்களின் புதிய பரிமாணம் இது!

>>மேலும்…

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

– கனகலஷ்மி

இந்த மாதம் பாரதிகிருஷ்ணன்

(இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்)

அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவுக்கும் எனக்கும் இடையில், ஒரு பெரிய சுவர் எழும்பி இருந்தது. யாரோடும் சேர்ந்து இருக்காமல், மதுரை வீட்டில் தனியே இருந்தார் அப்பா. என்னோடு வந்து இருக்க வேண்டுமென்று நானும் அவரை அழைக்க வில்லை. அதற்குக் காத்திரமான காரணங்கள் எனக்கிருந்தன.

தனித்து, ஒற்றையாக பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அப்பா இப்போது நினைவின்றிக் கிடந்தார். அன்று காலைதான் நினைவு தப்பிப் போய் இருந்தது. தகவல் தெரிந்து மாலையில் நான் வந்து சேர்ந்தேன். மருத்துவர் வந்து பார்த்தார். கொஞ்சம் மருந்து மாத்திரைகள், திரவ உணவு என்று அன்றைய இரவு கடந்தது.

>>மேலும்…

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள்..

இந்த மாதம் கபிலன் வைரமுத்து

நம்பிக்கை நொடிகள் பக்கங்களில் இடம் பெறுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது பல காட்சிகள் விரிந்தன. சாதனை படைத்த ஒரு நபராக இல்லாமல், தன் வண்ணப் பந்தைத் தவறவிட்டு தவறவிட்டு துரத்திக் கொண்டோடும் குழந்தையைப்போல இலட்சியங்களை தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் ஒரு வெள்ளை இளைஞனாக இங்கே இடம் பெறுகிறேன்.

>>மேலும்…

இந்திய ஜனாதிபதியாவேன்..

தொழிலதிபர் முகமது இலியாஸ்

அதிரடி பேட்டி

உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்?

என்னுடைய பிறந்த ஊர் தற்பொழுது வ.உ.சி மாவட்டத்திலுள்ள வல்ல நாடு என்ற குக்கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அதில் முதல் ஐவர் ஆண்கள் கடைசி இருவர் பெண்கள். நான் என்னுடைய பெற்றோருக்கு நான்காவது ஆண் மகன். என் பிறந்த தேதி 21-09-1959.

இளமைக்காலத்தில் ஆன்மீகம் மற்றும் விளையாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்தினேன்.

ஆன்மீகத்திலே அதிகம் கவனம் செலுத்தியதின் காரணமாக பெயர் சொல்லும் அளவிற்கு மாபெரும் விளையாட்டு விளையாட்டு வீரனாக என்னால் திகழ முடியவில்லை. சிறு வயதிலிருந்தே என்னால் முடிந்த உதவிகளை (பணம் உட்பட) மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். 1980ஆம் ஆண்டு வரலாறு பாடத்தில் நான் இளநிலைப் பட்டதாரி ஆனேன். நான் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதுநிலை ங.நஸ்ரீ., இரண்டாம் ஆண்டு மாணவராக இருக்கிறேன். என் அப்பா ஆரம்பித்த பஸ் கம்பெனி, சேம்பர் செங்கல், ஆஸ்பத்திரி இவற்றை என் சகோதரர்களுடன் நடத்தி வந்தேன். நான் தனியாக கடந்த இருபத்தியிரண்டு ஆண்டு காலமாக, திருநெல்வேலியில் ஙஏ ஜூவல்லர்ஸ் ட கற்க் என்ற நகைக்கடையை நடத்தி வருகிறேன். எங்களது ஙஏ ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 77 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நான் தற்போது ப.ங.ஏ.நற்ங்ப்ப் என்ற பெயரில் ப.ங.ப. கம்பிகளைத் தயார் செய்யக்கூடிய தொழிற்சாலை ஒன்றைக் கட்டி வருகிறேன்.

நீங்கள் சுயமுன்னேற்றப் பேச்சாளராகவும் எழுத்தாள ராகவும் உருவானது எப்படி?

சிறுவயது முதலே நான் ஒரு பெரிய பேச்சாளராக ஆக வேண்டும் என்ற உந்துதல் என்னை அறியாமலேயே என்னிடம் இருந்து வந்தது. ஆனால் நான் பேச ஆரம்பித்தது என்னுடைய 38ஆவது வயதில் அதாவது 1997ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மற்றும் ஏனைய விழாக்களில் 1260 கூட்டங்களில் பேசியுள்ளேன். கடந்த பத்தாண்டுகளாக திருநெல்வேலி வடக்குச் சுழற் கழகத்தில், வாரம் ஒரு தகவல் என்ற பெயரில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு தலைப்பில் பேசி வருகிறேன்.

பேச ஆரம்பித்த புதிதில் என்னுடைய பேச்சைக் கேட்ட நண்பர்கள், சுழற்சங்கத்தினர் மற்றும் பலர் என்னுடைய கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவதோடு அறிவுப்பூர்வமான தாகவும் மற்றும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கிறது. எனவே, என்னுடைய கருத்துக்களை புத்தகமாக வெளியிடுமாறு கூறினர். தர்ற்ஹழ்ஹ் இப்ன்க்ஷல் நான் பேசிய பேச்சுக்களின் தொகுப்பே என்னுடைய இரண்டு புத்தகங்கள். 1. பொன்னான வாழ்வு மலரட்டும். 2. வாழ்க்கை ஒரு தங்கப் புதையல். கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய முதல் புத்தகம் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன. என்னுடைய இரண்டாவது புத்தகம் கடந்த 26.12.10 அன்று மாண்புமிகு மத்திய உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களால் வெளியிடப்பட்டது.

சிறு வயது முதலே என்னிடம் தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தபடியாலும், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருந்ததாலும் எந்தவொரு விஷயமும் என்னை பாதிக்கவில்லை. மோசமான ஒரு சூழ்நிலை உருவாகிற போது என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன்.

உங்கள் வருங்கால கனவுகள் மற்றும் திட்டங்கள்?

கண்டிப்பாக ஒரு நான் இறைவனின் அருளால் இந்தியத்திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்பேன். அதற்கான முயற்சியிலும் இப்போதே ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய 72ஆவது வயதில் 25.06.2032 அன்று இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியாக பொறுப் பேற்பேன்.

தேதியைக்குறிப்பிட்டு ஜனாதிபதி ஆவேன் என்று நீங்கள் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியென்ன?

ஜனாதிபதியாக வேண்டுமென்பது என் நீண்ட காலக்கனவு. பல இடங்களில் இருந்தும் பொறுப்புகளும் பதவிகளும் வந்தாலும் என் இலக்கு சிறிய பதவிகளோடு நின்றுவிடவில்லை. தற்போது எம்.எல்.சி ஆவதற்கான முயற்சியில் உள்ளேன். நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் நாட்டின் பதினேழாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்பேன்.

எப்படி உங்களால் தேதி குறிப்பிட்டு சொல்ல முடிகிறது?

இன்று வரை நம்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அனைவரின் சுயவிபரக் குறிப்பையும் வைத்துள்ளேன். அனைவரும் அதே தேதியில்தான் சட்டப்படி பொறுப்பேற்றுள்ளனர். அது போலவே நானும் அதே தேதியில் என் 72ஆம் வயதில் பொறுப்பேற்பேன்.

உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த தடைகள் அல்லது தோல்விகள், அப்பொழுது உங்களை ஊக்கப் படுத்திய சுயமுன்னேற்றச் சிந்தனை எது?

என் வீட்டில் நான் ஒருவன்தான் இளநிலைப் பட்டதாரி. சிறுவயது முதலே எனக்கு ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு உண்டு. எனது தந்தை படிக்கவில்லை. நான் குடும்ப ரீதியாக தொழில் ரீதியாக முற்போக்குச் சிந்தனையோடு என் தந்தை, சகோதரர்களிடம் ஆலோசனை கூறினால் நீ பி.ஏ. படித்திருக்கிறாய் என்ற திமிரில் பேசுகிறாயா? உனக்கு என்ன தெரியும் என்று என் மனம் புண்படும்படி மட்டம் தட்டிப் பேசுவார்கள்.

எனவே நான் திருமணத்திற்கு முன்பே இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்.

இறைவா எனக்கு ஆண்மக்கள் வேண்டாம். பெண் குழந்தைகளே போதும்.

என் சகோதரர்களும் தந்தையும் என்னை மட்டம் தட்டி வேதனை கொடுக்கும் போதெல்லாம் நான் மனம் தளராமல் இவர்கள் முன்னிலையில் மாபெரும் வெற்றி பெறுவேன் என்று எனக்கு நானே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். இன்றுவரை இமயம் போலிருந்த என் தன்னம்பிக்கை வீண் போக வில்லை.

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

குறிக்கோள் இல்லாத வாழ்க்கையும் இலட்சியம் இல்லாத பயணமும் கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்றது. தீர்மானிக்கப்படாத இலக்கு என்பது திசை தெரியாமல் செல்லும் படகுக்குச் சமம். இது போன்றுதான் குறிக் கோள் இல்லாத வர்களின் நிலைமையும் ஆகும். உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே செயல் களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமை யாதவை என்பது ஸிம்மன்ஸின் கருத்தாகும்.

12 வயது சிறுவன் ஒருவன் புதிய சைக்கிள் ஒன்று வாங்கி அதை ஜாலியாக ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த சைக்கிள் திருடு போய் விட்டது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவனுடைய சைக்கிள் கிடைக்கவில்லை.

ஆத்திரப்பட்ட அந்தச் சிறுவன் வீட்டு வாசற் படியில் நின்று கொண்டு என்னுடைய சைக்கிளைத் திருடியவன் என் கையில் சிக்கினால் அவனை அடித்து நொறுக்கி விடுவேன் என்று கத்தினான்.

அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த போலீஸ்காரரின் காதில் அந்தச் சிறுவனின் சப்தம் விழுந்தது. உடனே அந்த போலீஸ்காரர் சிறுவனைப் பார்த்து, ‘தம்பி நீ கவலைப்படாதே. முதலில் குத்துச்சண்டையை பழகிக்கொள். அதன் பிறகு சண்டைக்குப் புறப்படு’ என்றார்.

உடனே அந்தச் சிறுவன் போலீஸ்காரரின் அறிவுரையை தன்னுடைய இலட்சியமாக தன் மனதில் ஆழமாகப் பதித்துக்கொண்டான். அதன் பிறகு குத்துச்சண்டையை முறையாகக் கற்ற அந்தச் சிறுவன் பல போட்டிகளில் கலந்து கொண்டு பலரை அடித்து நொறுக்கினான்.

பிற்காலத்தில் உலகக் குத்துச்சண்டை வீரராக மாறி உலகப்புகழ் பெற்றான். அவன்தான் உலகப் புகழ்பெற்ற முகமது அலி.

இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் என்ன?

இலட்சியம் உடையவர்கள் சிங்கத்தைப் போன்று காட்டுராஜாவாகத் திகழ்கிறார்கள். இலட்சியம் என்றால் என்ன? என்று கேட்கக் கூடியவர்கள் ஆட்டுக்குட்டியைப்போன்று மற்றவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக் கிறார்கள்.

நம்மிடம் இலட்சியம் இருந்தால் நம்முடைய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கையளவு கொண்ட இதயம் இருக்கிறது. ஆனால் அந்த இதயத்தில் எழுகின்ற எண்ணங்களும் இலட்சிங்களும் வெவ்வேறானவை. நாம் நம்முடைய இதயத்தில் உயர்ந்த இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

இலட்சியம் மட்டும் இருந்தால் போதாது. இலட்சியத்தைச் செயல்படுத்த முதலில் நல்ல எண்ணம் தேவை. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து விரட்டவேண்டும்.

குறிக்கோ ளோடு இணைந்த நல்ல எண்ணம் இருந்தால் தன்னம்பிக்கை தானாக வரும்.

வெற்றியாளராய் மலர என்னவெல்லாம் தேவை?

எல்லா இரவுகளும் விடிகின்றன என்ற நம்பிக்கையில்தான் நாம் படுக்கைக்குச் செல்கி றோம். கீழே விழுந்தவன் எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் எழுகிறான்.

நம்பிக்கையும் நல்ல எண்ணமும் இருந்தால் மட்டும் போதாது. சமயோசிதமாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றலை நமக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். அறிவு எல்லோரிடமும் இருக்கிறது. அறிவில்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாரும் இருக்கமுடியாது. இறைவன் வழங்கி இருக்கிற அறிவை, சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து செயல்படுத்துவது நன்மை பயக்கும்.

அமெரிக்காவைச் சார்ந்த இராபர்ட் என்பவர் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக விளங்கக்கூடிய பேனாவும் மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமாக எழுதலாம். விபரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள் என்று ராபர்ட்டுக்கு மணியார் டர்கள் வந்து குவிந்தன. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். ‘புத்திசாலிகளே, பென்சிலை வைத்து எழுதுங்கள்.’ இராபர்ட் ஏமாற்றவில்லை. கொஞ்சம் நிதானமாக யோசிக்காமல் பணம் அனுப்பியவர்கள்தான் ஏமாந்தார்கள்.

அறிவின் அடையாளம் எது?

தெரிந்ததைத் தெரிந்தது என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்களே உண்மையான அறிவாளி ஆவர். அறிவிற்கு அடையாளம் சுயநலம் கருதாமல் சேவை செய்வதுதான். மனம்விட்டுப் பேசுவதைத் தவிர, சிறந்த அறிவு இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.

அறிவு என்பது மேலே பறக்க பறக்க உயர்ந்து கொண்டே போகும் வானம். எல்லாம் அறிந்து விட்டதாக நினைப்பவன் ஏதோ ஒரு படியில் நின்று விடுகிறான். ஒன்றும் தெரியாது என்று நினைப்பவன் மென்மேலும் உயர்ந்து கொண்டே இருப்பான்.

நாக்கைப் பார்த்து மருத்துவர்கள் நோயை அறிந்து கொள்வதைப் போன்று, அறிவாளிகள் ஒருவருடைய பேச்சைக்கேட்பதன் மூலம் அவருடைய மூளையிலும் இதயத்திலும் உள்ளதை அறிந்து கொள்வார்கள்.

நம்பிக்கை, நல் எண்ணம், சமயோசித அறிவு இவற்றோடு உழைக்கக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

உழைப்பின் உன்னதத்தை எவ்வாறு நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்?

உழைப்பின் எந்த ஒரு மனிதனையும் ஏமாற்றுவதில்லை. மனிதர்களாகிய நாம்தான் உழைக்காமல் ஏமாந்து விடுகிறோம். மின் மினிப் பூச்சி பறக்கிறபோதுதான் பளபளக்கிறது. இது போன்று ஒரு மனிதன் சுறுசுறுப்போடு இயங்குகிற போதுதான் வாழ்க்கையிலே வெற்றியடைகிறான். நமக்கு இடைவிடாத முயற்சி தேவை.
விடாமுயற்சியின் இடத்தை எந்தவொரு கல்வியாலும், பரம்பரைச் சொத்துக்களாலும் நிரப்பமுடியாது என்று கால்வின் கூளிச் என்றஅறிஞர் கூறுகிறார். நம்முடைய தலைக்கு மேலே துன்பப்பறவை பறப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அப் பறவை நம் தலையில் கூடு கட்டாமல் இருப்பதை நம்மால் தடுக்க முடியும் எப்படி? உழைப்பால்.

பணக்காரராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கான உழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை.

ஆடினால்தான் மயிலுக்கு அழகு. பாடினால் தான் குயிலுக்கு அழகு. ஓடினால்தான் ஆற்றுக்கு அழகு. உயர்ந்து நின்றால்தான் மலைக்கு அழகு. ஆர்ப்பரித்தால்தான் கடலுக்கு அழகு. மீண்டும் மீண்டும் முயன்றால்தான் மனிதனுக்கு அழகு.